ஸ்டாலினுக்கு மனசாட்சியே இல்ல.. உங்களுக்காக நான் இருக்கேன்… ஆட்டத்தை தொடங்கிய விஜய்…!

Spread the love

சென்னை மாநகராட்சியில், தூய்மை பணியாளர்களை தனிமயமாக்குவதை எதிர்த்து 10 நாட்களாக, ரிப்பன் மாளிகை முன் தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களிடம் தமிழக அரசு பலவிதமாக பேச்சுவார்த்தை நடத்தியும், நிரந்தர ஊழியர் ஆக்கும் வரை போராட்டம் தொடரும், என உறுதியுடன் உள்ளனர். த.வெ.க தலைவர் விஜய், அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

“உங்களுடன் த.வெ.கவும், நானும் துணை நிற்போம்” என உறுதியளித்தார். த.வெ.க தலைவர் தனது எக்ஸ் தளத்தில், கொரோனா மற்றும் புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களின் நலனுக்காக, தங்களின் உயிரை பணயம் வைத்தவர்கள், தூய்மை பணியாளர்கள். அப்படிப்பட்டவரை, தனியாருக்கு தாரைவாத்து கொடுத்தது மாடல் திமுக அரசு. தூய்மை பணியாளர்கள் இரவும் பகலுமாக போராடிவரும் நிலையில், நான் அவர்களை நேரில் சந்திக்க விரும்பினேன். எனினும், போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என கருதிய தூய்மை பணியாளர்கள், என்னை த.வெ.க தலைமை கழகத்தில் வந்து சந்தித்தனர்.

அப்பொழுது அவர்கள் தெரிவித்த கருத்துகளை கேட்ட பொழுது, மனிதாபிமானம் இல்லாத மாடல் அரசின் செயல்களை காண முடிகிறது. தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பில் தான், நோய் தொற்றுகள் குறைந்து, மாநகரம் சுத்தமாகிறது. அவர்களின் கோரிக்கைகளுக்கு, அரசு கொடுத்த வாக்குறுதியின் படி, செவி சாய்ப்பது கடமை. எதிர்க்கட்சியாக இருந்த போது, தூய்மை பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்த திமுக அரசு, தற்போது அவர்களை நடுத்தெருவில் போராடும் நிலைக்கு தள்ளி விட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக கடந்த 19.1.2021 அன்று, தற்போதைய முதலமைச்சர் எழுதிய தேர்தல் வாக்குறுதி எண் 153 படி, அவர்களை பணி நிரந்தரம் செய்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தூய்மை பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும், சட்டப் போராட்டத்திற்கும் த.வெ.கவும், நானும் உறுதுணையாக நிற்போம் என்றார், த.வெ.க தலைவர் விஜய்.

Srimathi

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

8 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

8 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

8 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

8 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

9 மணத்தியாலங்கள் ago