மனைவி ஒருவர் ஸ்பா மையத்தில் பணியாற்றி வந்த நிலையில், அங்கு அவர் தவறான செயல்களில் ஈடுபட்டு வந்ததாக அவரது கணவருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், மனைவியைப் பின்தொடர்ந்து சென்று அவதானித்த கணவன், ஸ்பா மையத்தின் மறைவில் அவர் தவறான தொழில் செய்து வந்ததை கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை நடுரோட்டிலேயே வைத்துச் சண்டையிட்டுள்ளார். “தனக்கு டிபி நோய் இருப்பதாகப் பொய் பழி போட்டுவிட்டு, நீ இங்கே அசிங்கமான தொழிலில் ஈடுபடுகிறாய்! நீ அசிங்கப்பட்டுவிட்டாய், உன்னைத் தொடக்கூட மாட்டேன்… என் குழந்தையை மட்டும் என்னிடம் கொடுத்துவிடு!” எனக் கூறி நடுரோட்டில் சத்தம் போட்டுள்ளார்..
கணவன் – மனைவி இடையே நடந்த இந்த சண்டையை அப்பகுதி பொதுமக்கள் கூடி வேடிக்கை பார்த்தனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், குடும்ப உறவுகளில் உண்மையும் நம்பிக்கையும் இல்லாமல் போனதே இதுபோன்ற அசிங்கங்களுக்குக் காரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
