உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரூபாலி குப்தா என்பவர், தனது கணவர் சிவம் குப்தா மீது வரதட்சணை கொடுமை மற்றும் இயற்கைக்கு மாறான முறையில் நடந்துகொண்டதாகக் காவல்நிலையத்தில் அதிர்ச்சிகரமான புகார் ஒன்றை அளித்துள்ளார். திருமணமான சில நாட்களிலேயே தனது கணவரின் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கண்ட ரூபாலிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் ரகசிய கேமரா மூலம் கண்காணித்தபோது, தனது கணவர் அவரது ஆண் நண்பர்களுடன் ஆபாசமான மற்றும் இயற்கைக்கு மாறான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த ஆதாரங்களுடன் அவர் காவல்துறையை அணுகியுள்ளார்.
மேலும், தனது கணவர் தரப்பிலிருந்து கூடுதலாக ₹50 லட்சம் வரதட்சணை கேட்டுத் தன்னைத் தொடர்ந்து சித்ரவதை செய்ததாகவும் ரூபாலி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். தனது கணவரின் ரகசியத் தொடர்புகள் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அவர் மிரட்டியதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
