“திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் பேசிய மனைவி”…. ஆத்திரத்தில் கணவன் செய்த உச்சக்கட்ட கொடூரம்… 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட அழுகிய சடலம்…!

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் கடம்பா குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நாகலட்சுமி என்பவருக்கும், நத்தம் பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான அரவிந்த் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் நாகலட்சுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. நாகலட்சுமியின் வீட்டார் இவர்களது காதலுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், அவருக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளையும் செய்தனர். அதன்படி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய வீரமணி என்பவருக்கும் நாகலட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணம் முடிந்த போதிலும் நாகலட்சுமி தனது முன்னாள் காதலனான அரவிந்துடன் தொடர்ந்து ரகசியமாக பேசி வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலும், தனியாகச் சென்றும் நீண்ட நேரம் போனில் பேசி வந்ததால் மனைவியின் நடத்தையில் கணவர் வீரமணிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மனைவியிடம் வீரமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டபோதுதான், நாகலட்சுமிக்கும் அரவிந்துக்கும் இடையேயான காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த வீரமணி, இருவரையும் கடுமையாகக் கண்டித்துள்ளார். கணவரின் எச்சரிக்கைக்குப் பிறகு நாகலட்சுமி அரவிந்துடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

இருப்பினும், அரவிந்த் தொடர்ந்து நாகலட்சுமியைத் தொடர்புகொண்டு பேசுமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நாகலட்சுமி தன் கணவருடன் தாய் வீட்டில் நடந்த திருவிழாவிற்குச் சென்றிருந்தபோதும், அரவிந்த் அவரைத் தேடி வந்து நேரில் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நாகலட்சுமி, அரவிந்த் தனக்குத் தொடர்ந்து கொடுத்து வரும் தொல்லைகள் குறித்து கணவர் வீரமணியிடம் உண்மைகளைக் கூறி முறையிட்டுள்ளார். மனைவியின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த வீரமணி, அரவிந்தைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து, நாகலட்சுமியின் போனில் இருந்து அரவிந்துக்கு சிறுமலை தாளக்கடை பகுதிக்கு வருமாறு குறுஞ்செய்தி (Message) அனுப்பியுள்ளார்.

அதனை நம்பி கடந்த சனிக்கிழமை இரவு சிறுமலை பகுதிக்கு வந்த அரவிந்த்திடம் வீரமணி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற வீரமணி, தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் அரவிந்தை சரமாரியாக அடித்துக் கொலை செய்தார். பின்னர், உடலை அங்குள்ள ஒரு குப்பைக் கிடங்கில் வீசி மறைத்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மலைப் பகுதியிலேயே சுற்றித் திரிந்துள்ளார். இதற்கிடையில் அரவிந்தைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் நத்தம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் வீரமணி தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தனிப்படை அமைத்துத் தேடி வந்த போலீசார், திங்கட்கிழமை காலை வீரமணியைக் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அரவிந்தின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதுடன், வீரமணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

3 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago