காதல் திருமணம்…! “அண்ணன் கொடுத்த மெட்டி  பரிசு…” சந்தேகத்தில் மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 31, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கார்வா சௌத் திருவிழா நாளில் அண்ணன் பரிசாக அளித்த மெட்டியால் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, கணவனே தனது மனைவியின் முகத்தில் உரக்கல்லால் தாடிக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த ஆனந்த் ஸ்ரீவஸ்தவா என்பவருக்கும் மது என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில், கார்வா சௌத் பண்டிகையின்போது ஆனந்தின் அண்ணன் தனது தம்பியின் மனைவி மதுவிடம் மெட்டியைப் பரிசாகக் கொடுத்துள்ளார். இதனால் மதுவுக்கும் அண்ணனுக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருப்பதாகக் கணவன் ஆனந்துக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து இருவருக்கும் இடையே குடும்பத்தில் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

   

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மது தூங்கிக் கொண்டிருந்தபோது, ஆத்திரமடைந்த கணவன் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா திடீரென உரக்கல்லை எடுத்து அவரது முகத்தில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மனைவியைக் கொன்ற கணவன் ஆனந்தை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.