“அம்மா எந்திரிமா”… காது, மூக்கில் வழிந்த ரத்தம்… தாயைப் பார்த்து கதற 7 வயது சிறுமி… மனைவியை அடித்தே கொன்ற கொடூர கணவன்…!

Spread the love

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் பகுதியில் உள்ள தெருவில் வசித்து வரும் பெர்மாடி நாணி(30) என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த தேனா (26) என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதிகளுக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கட்டிடத் தொழில் செய்து வரும் நாணிக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு பிறகு தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அவர் மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனா பிரசவத்திற்காக அவருடைய தாய் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து குழந்தையை பெற்றுள்ளார். குழந்தை பிறந்த சில வருடங்கள் குடிக்காமல் இருந்ததால் மீண்டும் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். பிறகு வழக்கம் போல குடிக்க தொடங்கிய நானி வேலைக்கு செல்லாமல் குடும்ப செலவுகளை பார்த்துக் கொள்ளாமல் மனைவி மற்றும் குழந்தையை துன்புறுத்தியுள்ளார். இதனால் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை கணவன் மனைவி இடையே வழக்கம் போல சண்டை ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த நானி அவருடைய மனைவியை கையால் சரமாரியாக அடித்துள்ளார்.

அதில் அவருடைய கண், முகம் மற்றும் தலையாகிய பகுதிகளில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதில் அவரின் காது மற்றும் மூக்கு வழியாக ரத்தம் வழிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

4 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

5 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

5 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

5 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

5 மணத்தியாலங்கள் ago