திருவண்ணாமலை மாவட்டம் கொடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (50).இவருடைய மனைவி சுலோச்சனா. இருவரும் சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார்கள். இதற்கு இடையில் சுலோச்சனாவுக்கு வேதநாயகம் என்பவரோடு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளதால் இதை அறிந்த கணவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சொந்த ஊருக்கு செல்வதாக ராஜா போரூர் சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தத்தில் மனைவிக்காக காத்திருந்துள்ளார் .
அப்போது அவருடைய மனைவி சுலோச்சனா தன்னுடைய கள்ளக்காதலனுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ராஜா பையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்ததில் அவருடைய மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது . இதனால் அதிர்ச்சியடைந்த சுலோச்சனாவோடு வந்த வேதநாயகம் மற்றும் அவருடைய நண்பர்கள் ராஜாவை சரமாரியாக தாக்கியதில் அவரும் காயமடைந்தார். இதன்பின்னர் கணவன் மனைவி இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…