“கையில ஒரு குழந்தை, வயித்துல ஒரு குழந்தை” குக்கர் மூடியால் ஒரே போடு… கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் கணவர் செய்த காரியம்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்… அரசுப் பள்ளி ஆசிரியரின் கொடூரச் செயல்…!!

Spread the love
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பாலில், அரசுப் பள்ளி ஆசிரியரான குல்தீப் என்பவர் தனது கர்ப்பிணி மனைவி ஆர்த்தியை பிரஷர் குக்கர் மூடியால் தாக்கிய கொடூரச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மூன்று முறை மனைவியை அடித்துத் துன்புறுத்திய நிலையில், தற்போது நான்காவது முறையாக நடத்தப்பட்ட இந்த மிகக்கடுமையானத் தாக்குதலால் ஆர்த்தி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய ஆசிரியர் ஒருவரே, மனிதாபிமானமற்ற முறையில் தனது குடும்பத்தினருக்கு இத்தகைய சித்திரவதைகளை அளிப்பது கண்டனத்திற்குரியது.

இந்தக் கொடூரத் தாக்குதலின் போது, தனது தாய் தாக்கப்படுவதைக் கண்டு சிறுமி அழுது துடித்தது பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தையின் கண்ணீர் கூட அந்த நபரின் கல்நெஞ்சத்தை மாற்றவில்லை என்பது வேதனைக்குரியது. குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் குல்தீப் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆசிரியப் பணியில் இருப்பவர்கள் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுவது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கே கறையாக அமைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் குழந்தைகளுக்கும் உரியப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
Soundarya

Recent Posts

கரும்புத் தோட்டத்தில் ஓட ஓட விரட்டி கொலை… கொல்லப்பட்ட ரௌடி மதன் யார்?… நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் போல நுழைந்த திகில் பின்னணி……!

சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…

8 minutes ago

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி…. டார்க் வெப்பில் கசிந்த லட்சக்கணக்கானோர் டேட்டா?…. உங்க அக்கவுண்ட் சேஃபா?… திடுக்கிடும் தகவல்….!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி…

20 minutes ago

விராலிமலையில் விஜயபாஸ்கரின் மாஸ் என்ட்ரி…. அதிமுகவை அதிர வைத்த செங்கோட்டையன் அறிவிப்பு….. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…..!

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் களமிறங்குவது உறுதியாகியுள்ளதாக அமைச்சர் கே.ஏ.…

26 minutes ago

டிசம்பருக்குள் செம ஜாக்பாட்….. 2 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை… அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு….!

தமிழகத்தில் தகுதியுள்ள முதியோர்களுக்கு உதவும் வகையில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் 2 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று…

30 minutes ago

திடீர் பரபரப்பு… நாதக வேட்பாளர் கார்த்திகா கைது…. வீதியில் இறங்கும் சீமான்…. தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்….!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காவல் துறையினரால்…

35 minutes ago