சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் வாடகை வீட்டில் தம்பதி ஒருவர் வசித்து வந்துள்ளனர். கடந்த 22 ஆம் தேதி இருவரும் தங்கள் வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளன. அந்த சமயத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களுடைய செல்போனில் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பெண் வேலை செய்யும் இடத்திற்கு சென்ற ஒரு நபர், நான் ஒரு இன்ஸ்பெக்டர், உங்கள் மீது தொடர்ந்து புகார் வருகிறது. விசாரணைக்கு வாருங்கள் என்று கூறி தன்னுடைய காரில் அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதன்பிறகு அந்த பெண்ணிடம் தன்னிடம் உள்ள வீடியோவை காட்டி இது நீங்கள் தானே என்று கேட்டுள்ளார். வீடியோவை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து எப்படி இதை எடுத்தீங்க என்று கேட்டுள்ளார். உடனே அந்த நபர், இந்த வீடியோவை யாருக்கும் அனுப்பக்கூடாது என்றால் 3 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று மிரட்டிய அவர் அணிந்திருந்த செயினை கேட்டுள்ளார்.
உடனே அந்தப் பெண் அது கவரிங் என்று தெரிவிக்க பிறகு நாளை 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு உன் கணவரிடம் கூறாமல் உல்லாசமாக இருக்க நான் செல்லும் இடத்திற்கு வரவேண்டும், இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி அவர் மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தன்னுடைய கணவரிடம் இது குறித்து தெரிவிக்க உடனே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நான்கு வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…