லாத்தூரில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அது தொடர்பான வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் வயதான விவசாயி ஒருவர் தன்னுடைய தோளில் கலப்பையை பூட்டிக்கொண்டு தன் மனைவியுடன் விவசாய நிலத்தில் விழுவது போன்று பதிவாகி இருந்தது. லாத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவிந்த் பவார் என்ற 65 விவசாயி வசித்து வரும் நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் கோவிந்த் பவாருக்கு சொந்தமாக 2½ ஏக்கர் வறண்ட நிலம் உள்ளது. அந்த நிலத்தை உழுது பிழைப்புக்கு வழித்தட முயற்சி செய்த அவருக்கு டிராக்டர் அல்லது எருதுகள் வாங்குவதற்கோ வாடகை கொடுப்பதற்கு பணம் இல்லை.
இதனால் முடியாத வயதிலும் தவறாமல் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து மனித கலப்பையாக மாரி தன்னுடைய நிலத்தில் தானே உழவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்ய அதிக பணம் தேவைப்படுகின்றது. இதனால் நானும் என்னுடைய 60 வயது மனைவியும் மனித கலப்பையாக மாறிவிட்டோம். கடந்த எட்டு ஆண்டுகளாக இவ்வாறு தான் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். இப்போது எங்களால் முடியவில்லை. என் கை கால்கள் நடுங்குகிறது. உடல் ஒத்துழைக்கவில்லை. வாழ்க்கையும் எங்களுக்கு வேறு வழியை காட்டவில்லை என்று அந்த முதியவர் உருகமாக பேசியுள்ளது பலரையும் கலங்க வைத்துள்ளது.
