2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்தியாவில் விற்பனை ஆகும் அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் பிரேக்கிங் முறை கட்டாயமாக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் முறையானது அவசரமாக பிரேக் போடும்போது வாகனத்தின் சக்கரங்கள் லாக் ஆகாமல் தடுக்கும்.
இதனால் வாகனம் ஸ்கிட் ஆகாமல் பாதுகாப்பாக ஓட்ட முடியும். ஏ.பி.எஸ் பிரேக்கிங் முறை பாதுகாப்பு நன்மைகள் பரவலாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் அரசாங்கத்தில் இந்த உத்தரவு உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களின் விலை உயர்வு அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல் செலவு நுகர்வோருக்கு சுமையாக இருக்கலாம். ஆய்வாளர்களின் கூற்றுப்படி இருசக்கர வாகனங்களின் விலை 3000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வர உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
