தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி?… ஆவணம் இருந்தால் பயமில்லை… மாவட்டக் குழுவின் அதிரடி அறிவிப்பு…!!!

By Rajeshwari on பங்குனி 21, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அமல்படுத்தப்பட்டுள்ள நடத்தை விதிகளால், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் 50,000 ரூபாய்க்கு மேலான ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பணத்தை சட்டப்பூர்வமாக மீட்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டக் குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், செலவினக் கண்காணிப்பு அதிகாரி மற்றும் மாவட்டக் கருவூல அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். பணத்தை மீட்க விரும்புவோர், அந்தப் பணம் எதற்காகக் கொண்டு செல்லப்பட்டது என்பதற்கான வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள், ஜிஎஸ்டி சான்றிதழ்கள் அல்லது முறையான ரசீதுகளை இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

   

இந்நிலையில் திருமணம் அல்லது மருத்துவ அவசரத்திற்காகப் பணம் கொண்டு செல்பவர்கள், அதற்கான அழைப்பிதழ் அல்லது மருத்துவமனை ஆவணங்களைக் காண்பித்து 24 முதல் 72 மணி நேரத்திற்குள் பணத்தைப் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். உரிய ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில், அந்தப் பணம் மேலதிக விசாரணைக்காக வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.