திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தவெக அரசின் தற்போதைய செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வெளியிட்டுள்ள கருத்துகள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தமிழகத்தின் வளர்ச்சி தேசிய சராசரிக்கும் கீழே சென்றுவிட்டதாகவும், அரசின் அலட்சியத்தால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் ஆந்திராவிற்குத் திசைமாறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், உலக முதலீடுகளை ஈர்ப்பதில் முத்திரை பதித்த ‘கடன்ஸ்’ அமைப்பு தனிநபர்களின் அதிகார அகந்தைக்குப் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டதாகவும், அனைத்துத் துறைகளும் பின்னோக்கிச் செல்வதாகவும் அவர் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
ஆட்சியின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் பொருளாதார நிலவரம் குறித்த அடிப்படைப் புரிதல் இல்லாமல் தற்போதைய முதலமைச்சர் விஜய் செயல்படுவதாக சாடியுள்ள மு.க.ஸ்டாலின், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மக்களைச் சந்தித்து வெறும் விளம்பரத்திற்காகவும், கையசைத்து மக்களை ஈர்ப்பதற்காகவும் மட்டுமே அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகக் விமர்சித்துள்ளார். பொருளாதார வீழ்ச்சி மற்றும் முதலீட்டு இழப்புகள் குறித்து ஆக்கப்பூர்வமான பதில்களை அளிப்பதற்குப் பதிலாக, இந்த முறையற்ற நிர்வாகப் போக்கே தொடர்வது தமிழகத்தின் எதிர்காலத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்திற்குட்பட்ட சாபோலி பகுதியில், கிராமங்களை இணைக்கும் குறுகிய சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.…
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த ஷியாம் பீகாரி என்பவர், கோவிலுக்கு வரும்…
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ரூ.634…
தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகரான ஜூனியர் பாலையா அவர்கள், தனது 70வது வயதில் உடல்நலக்குறைவு…
தமிழக அரசியலில் தவெக ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், எதிர்வரும் இடைத்தேர்தல்களை மையமாக வைத்து அரசியல் களத்தில் பல்வேறு…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 23 நாட்களாகும் நிலையில்,…