நம் வீட்டை என்னதான் சுத்தமாக வைத்திருந்தாலும் பாத்ரூமை சரியாக பராமரிக்க மறந்து விடுகிறோம். குளியலறையை அழுக்குகள் மற்றும் கரைகள் எதுவும் இல்லாமல் சுத்தமாக பராமரிப்பதன் மூலம் பல்லிகள் உள்ளே நுழைவதை தவிர்க்கலாம். குளியலறையை அதிக ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளாமலும் தண்ணீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். பல்லிகள் தண்ணீராலும் ஈரப்பதத்தாலும் ஈர்க்கப்படுகிறது. குளியலறை தொட்டிகள், சிங்க், குளியலறையில் இருக்கும் வாஷ்பேஷன் ஆகியவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பல்லிகள் பொதுவாக வீட்டில் இருந்த மூலைகளில் காணப்படும் பூச்சிகளைப் பிடித்து தின்பதற்காக வரும்.
சிறு பூச்சிகளை ஈர்க்கும் பொருட்களை குளியலறையில் வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி ஒட்டடை அடித்து தூசு இல்லாமல் பராமரிக்க வேண்டும். குளியலறை கதவை மட்டுமல்லாமல் ஜன்னல் கதவுகளையும் மூடி வைக்க வேண்டும். அதையும் மீறி உங்கள் பாத்ரூமில் பல்லி தொல்லை இருந்தால் அதனை தடுக்க இதை ட்ரை பண்ணி பாருங்க. பூண்டு மற்றும் வெங்காயத்தை நறுக்கி அதில் கிராம்பு, மிளகு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனை வடிகட்டி திரவமாக பிரித்து அதனுடன் டெட்டால் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி கொள்ளவும். பல்லி அதிகமாக இருக்கும் இடத்தில் இதனை ஸ்பிரே செய்தால் பல்லிகள் இனி தலை காட்டாது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…