ஈரானிய மலைப்பகுதிகளில் எதிரிகளிடம் சிக்கிய அமெரிக்க விமானி… எங்கள் வீரர்களை கைவிட மாட்டோம்… 48 மணி நேரத்தில் நடந்த மீட்பு வேட்டை.. டிரம்ப் கொடுத்த மாஸ் அப்டேட்..!!!

By Rajeshwari on சித்திரை 5, 2026

Spread the love

ஈரானில் அமெரிக்காவின் எஃப்-15இ போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, மாயமான அமெரிக்க விமானியை மீட்கும் ரகசிய நடவடிக்கையை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக முடித்துள்ளன. ஈரானின் கடினமான மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்த அந்த விமானியை, எதிரி நாட்டுப் படைகள் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அமெரிக்க ராணுவம் தனது நவீன ஆயுதங்கள் மற்றும் டஜன் கணக்கான போர் விமானங்களைப் பயன்படுத்தி இந்த துணிச்சலான மீட்புப் பணியைச் செய்து முடித்துள்ளது.

இந்தச் சாதனையைப் பாராட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அமெரிக்கா தனது வீரர்களை ஒருபோதும் கைவிடாது” என்பதை இது நிரூபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சிக்கலான மீட்பு நடவடிக்கை இரண்டு நாட்களாக மிகவும் ரகசியமாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

   

இதனால் விமானியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ஈரான் பெரும் சன்மானத்தை அறிவித்திருந்த போதிலும், அமெரிக்க கமாண்டர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் நிலைமையைக் கண்காணித்து, ஒரு உயிரிழப்பு கூட இன்றி விமானியைப் பாதுகாப்பாக மீட்டனர்.

   

இந்நிலையில் ஈரானிய வான்பரப்பில் அமெரிக்காவின் வான்வழி மேலாதிக்கம் மற்றும் ராணுவத்தின் அபார வலிமையை இந்தச் சம்பவம் உலகுக்கு பறைசாற்றியுள்ளதாக டிரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். தற்போது மீட்கப்பட்ட விமானிக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.