சீமானுக்கு ‘ஜீரோ’.. விஜய்க்கு ‘எட்டு’.. திமுகவுக்கு ‘நூற்று எண்பது’.. எடப்பாடி கோட்டையில் ஸ்டாலின் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’.. மிரள வைக்கும் தேர்தல் சர்வே…!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ‘லோக்போல்’ (Lok Poll) அமைப்பு நடத்திய பிரம்மாண்ட கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. சுமார் 1,17,000 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள தொகுதிகளில் திமுக கூட்டணி 181 முதல் 189 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றியைப் பதிவு செய்யும் என்றும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 38 முதல் 42 இடங்களை மட்டுமே பெறும் என்றும் இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த கருத்து கணிப்பின் மிக முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுவது அதிமுகவின் எஃகு கோட்டையான கொங்கு மண்டலத்தில் ஏற்படப்போகும் மாற்றம் தான். எப்போதும் அதிமுகவிற்கு கைகொடுக்கும் மேற்கு மண்டலத்தில், இந்த முறை திமுக 44 முதல் 46 தொகுதிகளைக் கைப்பற்றி அதிமுகவின் ஆதிக்கத்தைத் தகர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகங்கள் இப்பகுதியில் திமுகவிற்கு பெரும் பலம் சேர்த்துள்ளதாகத் தெரிகிறது. சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக கூட்டணி வெறும் 9 முதல் 10 இடங்களுக்குள் சுருங்கும் என்பது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியாகக் கருதப்படுகிறது.

மண்டல வாரியான கணக்குகளைப் பார்க்கும்போது, சென்னை உள்ளிட்ட வடக்கு மண்டலத்தில் திமுக 53 முதல் 56 இடங்களைப் பிடித்து தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்கிறது. அதேபோல், டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் 39 முதல் 40 இடங்களையும், தென் தமிழகத்தில் 45 முதல் 47 இடங்களையும் திமுக கூட்டணி அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் அதிமுக இரட்டை இலக்க எண்களைத் தொடுவதற்கே கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது லோக்போல் கணிப்பின் மூலம் தெரியவருகிறது.

தமிழக அரசியலில் புதிய வரவாக இணைந்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், மாநிலம் முழுவதும் 8 முதல் 10 இடங்களில் வெற்றி பெற்று தனது கணக்கைத் தொடங்கும் என்று லோக்போல் தெரிவித்துள்ளது. அதேநேரம், நீண்ட காலமாகத் தேர்தல் களத்தில் இருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறையும் ஒரு தொகுதியில் கூட வெற்றி வாய்ப்பு இல்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் – சசிகலா கூட்டணி மற்றும் 5 முனைப் போட்டிகள் நிலவினாலும், களத்தில் நேரடிப் போட்டி திமுக மற்றும் அதிமுக இடையேதான் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

Nanthini

Recent Posts

40 ஆண்டுகால நட்பு… திரைக்கதை மன்னனின் மறைவால் நிலைகுலைந்து போன சூப்பர்ஸ்டார்… நண்பனின் உடலை பார்த்து கலங்கிய ரஜினி…!

தமிழ் திரையுலகின் மாபெரும் இயக்குநரும் திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு, ஒட்டுமொத்த சினிமா உலகையும் பெரும் சோகத்தில்…

4 minutes ago

“டெல்லியில் இனி இவர்தான் எல்லாமே”…. முதல்வர் விஜய் வெளியிட்ட அந்த ஒற்றை அரசாணை…. கொதித்தெழுந்த எதிர்க்கட்சிகள்… அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த நச்சுனு பதில்…!

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளரும்,…

5 minutes ago

வீட்டுக்குள்ளேயே வெடித்த டைம் பாம்… நச்சுப் புகையால் மூச்சுத்திணறி தந்தை மரணம்… மகன் நிலைமை?… தடயவியல் சோதனையில் வெளியான பகீர் உண்மை…!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள சக்ரதர் நகர் பகுதியில், நள்ளிரவில் வீட்டின் ஜன்னல் ஏசி கம்ப்ரெஸர் திடீரென பயங்கர…

7 minutes ago

“தவறு பண்ணிட்டோம் மாமா”…. ஸ்டாலினுக்கு ஓட்டு போடாதவர்கள் கதறி அழுவது ஏன்?…. செல்வபெருந்தகை உடைத்த ரகசியம்….!

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் தோல்வி…

15 minutes ago

நேற்று வரை சிரித்துக்கொண்டிருந்தவர்… வாக்கிங் சென்றவருக்கு நேர்ந்த சோகம்… திரையுலகைக் கண்ணீரில் ஆழ்த்திய பாக்யராஜின் கடைசி தருணங்கள்…!

தமிழ் சினிமாவின் "திரைக்கதை மன்னன்" என்று போற்றப்படும் மூத்த இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் (73) இன்று காலை காலமானார். கோவாவில்…

22 minutes ago

விஜய்யை ‘டச்’ செய்யாததே தப்பு…. தேர்தல் ரகசியத்தை உடைத்த ஸ்டாலின்… பின்னணியில் நடந்தது இதுதான்… தமிழக அரசியலை மாற்றிய 2 ஆண்டுகள்….!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திடம் ஆட்சியைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து திமுக இன்னும் மீளவில்லை. தேர்தல் பிரச்சாரக்…

25 minutes ago