தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்பொழுது தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், படு மாஸாக உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியின் வெறித்தனமான நடிப்பில் உருவாகியுள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
ஆடியோ லான்ச் நடக்கவில்லையே என அப்செட் ஆன ரசிகர்களுக்கு லியோ ட்ரைலர் மிகப்பெரிய விருந்து வைத்தது. ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு கோடி பார்வையாளர்கள் இந்த படத்தின் டிரைலரை பார்த்தனர். பல மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனையும் படைத்தது.விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது.
இரண்டாவது சிங்கிளான ‘Badass’ பாடல் கடந்த 28ம் தேதி வெளியாகி ஹிட்டடித்தது.‘லியோ’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி வரும் இத்திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
லியோ பட வெளியீடுக்கு இன்று ஒருநாள் மட்டுமே உள்ளது. எனவே திரைத்துறையை சார்ந்த முக்கியப்புள்ளிகளுக்கு நேற்று சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. இந்நிலையில், நேற்று சிறப்புக்காட்சி பார்த்த நடிகர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திரைப்பட குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, #LCU என பதிவிட்டுள்ளார். இதனை தளபதி ரசிகர்கள் தற்பொழுது கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…