வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு குட் நியூஸ்…. இன்று முதல் ரூல்ஸ் எல்லாமே மாறிடுச்சு… இனி ஒரே குஷி தான்….!

By Nanthini on தை 1, 2026

Spread the love

வீட்டு வாடகை சட்டங்களில் சமீபத்தில் மத்திய அரசு விரிவான மாற்றங்களை செய்துள்ளது. அது முறையாக அமல்படுத்தப்படுகின்றதா என்பதை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. வீடு வாடகைக்கு விடும் முறை, அதன் விதிமுறைகள் மற்றும் அதற்காக வழங்கப்படும் கட்டுப்பாடுகள் என பல விஷயங்களை மாற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது அனைவருக்குமே நன்மை அளிக்கும். வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர் இருவருக்கும் இது பாதுகாப்பை கொண்டு வரும்.

அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் இனி எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். உள்ளூர் வாடகை ஆணையத்தில் 60 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். வருடாந்திர வாடகை அதிகரிப்பு 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது.. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தால் அதன்படி இருக்கலாம். வீட்டு உரிமையாளர் வாடகையை உயர்த்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு தர வேண்டும். பாதுகாப்பு வைப்புத் தொகைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

   

இது அதிகபட்சமாக இரண்டு மாத வாடகையாக மட்டுமே இருக்கும். அதாவது மாத வாடகை 20,000 ரூபாயாக இருந்தால் 40000 மட்டுமே வைப்புத் தொகை ஆகும். வாடகை விலை சொத்தில் ஆண்டு மதிப்புக்கு ஏற்றதாக நிர்ணயிக்கப்படும். ஏப்ரல் 2025 முதல் வரி விதிப்பு விதிகள் மாறும். வாடகை வருமானம் வீட்டு சொத்து வருமானமாகவே கருதப்படும் உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 1 இன்று முதல் நாடு முழுவதும் வீட்டு வாடகை சட்டங்களின் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது.