தீவிர சிகிச்சையில் நல்லகண்ணு…. உடல்நிலை மேலும் பின்னடைவு… சற்றுமுன் பரபரப்பு தகவல்….!

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் களத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான தோழர் ஆர். நல்லகண்ணு (வயது 101), உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மூச்சுத்திணறல் மற்றும் வயது முதிர்வு சார்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, நேற்று உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினரால் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அவருக்குத் தொற்று பாதிப்புடன் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு மற்றும் உணவு உட்கொள்வதில் சிரமம் போன்ற உபாதைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருக்குச் செயற்கை சுவாசக் கருவி (Ventilator) மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, மருந்தின் அளவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்த நிலையில், அவரது உடல்நிலை சீராக மருத்துவக் குழுவினர் தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

9 மணத்தியாலங்கள் ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

9 மணத்தியாலங்கள் ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

10 மணத்தியாலங்கள் ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

10 மணத்தியாலங்கள் ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

10 மணத்தியாலங்கள் ago