சென்னையில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மற்றும் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தவெக நிர்வாகி கண்ணன் என்பவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்த அதிர்ச்சியிலிருந்தே மக்கள் மீளாத நிலையில், தலைநகரில் மீண்டும் ஒரு கொடூரக் கொலை சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் (28). தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த இவர், நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பிரதீப்பை ஓட ஓட விரட்டிச் சென்று தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரூ.18 லட்சம் கடன் விவகாரம் தொடர்பாகத் தனக்குக் கொலை மிரட்டல் வருவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பிரதீப் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இருப்பினும், அவர் புகார் அளித்தும் உரிய பாதுகாப்பு கிடைக்காத நிலையில் இந்த படுகொலை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…