“பாட்டி வயலுக்குப் போன அந்த சில மணி நேரம்”… 15 வயது சிறுமிக்கு வீட்டின் உள்ளே காத்திருந்த கொடூரம்… சொந்த தாத்தாவே செய்த காரியம்…!

By Nanthini on வைகாசி 29, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தின் நெக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், உறவுமுறையையே உலுக்கும் வகையிலான அதிர்ச்சிகரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள கிராமத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் பிழைப்பிற்காக வெளியூர் சென்றிருந்த நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் பாட்டியும் மற்ற உடன்பிறந்தவர்களும் ஆடுகளை மேய்க்க வயலுக்குச் சென்றுள்ளனர். இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிறுமியின் சொந்த தாத்தா, வீட்டில் தனியாக இருந்த அச்சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இக்கொடூரம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் அச்சிறுமியை மிரட்டியுள்ளார்.

   

இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவருக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிறுமியிடம் மென்மையாக விசாரித்துள்ளார். அப்போது தனக்கு நேர்ந்த துயரத்தை அழுதுகொண்டே சிறுமி விவரித்துள்ளார். மேலும், இந்த விசாரணையின் போது அதிர்ச்சியூட்டும் மற்றொரு உண்மையாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சிறுமியின் நெருங்கிய உறவினர் ஒருவரும் அவரைத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

மருத்துவர் அளித்த தகவலின் பேரில் உடனடியாக நெக்கனூர் காவல்துறையினர் களத்தில் இறங்கினர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டு, அவருக்கு விரிவான மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட சிறுமியின் சொந்த தாத்தா மற்றும் அவரது உறவினர் ஆகிய இருவர் மீதும் போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தற்போதைய நிலவரப்படி, முதற்கட்டமாக ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் மற்றொரு குற்றவாளியைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

   

பாதுகாப்பாக இருக்க வேண்டிய குடும்ப அமைப்பிற்குள்ளேயே, சொந்த தாத்தாவே பேரப்பிள்ளைக்கு இத்தகைய துரோகத்தை இழைத்திருப்பது பீட் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புனிதமான உறவுகளின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ள இந்தச் சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று அக்கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.