விபத்தா? கவனக்குறைவா?… கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… ரத்த வெள்ளத்தில் மிதந்த சாலை… கதறி அழும் குடும்பத்தினர்…!!

By Gayathri on புரட்டாதி 29, 2026

Spread the love

ஹைதராபாத் அருகே உள்ள படங்பேட்டை மாருதி நகர் பகுதியில் நடந்த ஒரு கோர விபத்தில், நாடர்குல் பகுதியைச் சேர்ந்த 29 வயதான பிரசன்னலட்சுமி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தனது இருசக்கர வாகனத்தில் அல்மாஸ்கூடா நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவர், எதிரே வந்த ஆட்டோ மீது மோதாமல் தவிர்ப்பதற்காக வாகனத்தை திருப்பியபோது நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக அப்போது அந்த வழியே வந்த டிராக்டரின் பின் சக்கரம் அவர் தலை மீது ஏறியதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

இந்த பயங்கர விபத்தின் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. விபத்து நடந்தவுடன் டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு அதன் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மீர்பேட் காவல் துறையினர், தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி வருவதோடு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.