ஐயோ கடவுளே… ரீல்ஸ் மோகத்திற்கு பலியான இளம் உயிர்கள்… வனப்பகுதியில் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on ஆவணி 31, 2026

Spread the love

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள லாடகூரி – சல்சா வனப்பகுதியில், சமூக வலைதளங்களுக்காக ரீல்ஸ் பதிவு செய்தபோது ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளும் ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிொண்ட இந்த விபத்தில், ரோஹித் முகமது மற்றும் அலிஃப் முகமது ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாகனம் ஓட்டும்போது கவனச்சிதறலை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தானவை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. காவல்துறை மற்றும் உள்ளூர் மக்களின் முதற்கட்ட விசாரணையின்படி, அதிவேகத்தில் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டர் மீது மோதியதுடன், மோதிய வேகத்தில் விபத்துக்கான காரணம் ரீல்ஸ் மோகம் என்பது தெரியவந்துள்ளது.

   

https://twitter.com/udayamdigital/status/2094376785261764694/video/1

   

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் விழிப்புணர்வற்ற ரீல்ஸ் மோகம் தங்களின் விலைமதிப்பற்ற உயிரைப் பறிப்பதுடன், சாலையில் செல்லும் மற்ற பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது. எனவே, இளைய தலைமுறையினர் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்பதைத் தவிர்த்து, சாலை விதிகளை முழுமையாகப் பின்பற்றிப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் தீவிர வேண்டுகோளாக உள்ளது.