ஐயோ கடவுளே… செல்போன் சீரமைக்கச் சென்ற இளம் பெண் பரிதாப பலி… RTC பேருந்தில் மோதி கொடூர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

By Swetha on புரட்டாதி 13, 2026

Spread the love

அமீர்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்த கொடூரமான சாலை விபத்தில், ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் RTC பேருந்தின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆந்திராவின் பீமவரத்தைச் சேர்ந்த ஹேமதுர்கா என்ற அப்பெண், பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தனது செல்போனை பழுதுபார்ப்பதற்காக அவர் ரேபிடோ பைக் மூலம் அமீர்பேட்டைக்குச் சென்று கொண்டிருந்தார்.

   

https://twitter.com/TeluguScribe/status/2098767131928354834/video/1

   

அமீர்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பிக் பாசார் பின் கதவு அருகே ரேபிடோ பைக் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த RTC பேருந்து பைக் மீது பலமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஹேமதுர்கா பேருந்தின் டயர்களுக்கு அடியில் விழுந்து உடனடியாக உயிரிழந்தார்; ரேபிடோ பைக் ஓட்டுநர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.