ஐயோ கடவுளே… போதையில் பறந்த அதிவேக கார் மோதி பயங்கர விபத்து… தம்பதி படுகாயம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 23, 2026

Spread the love

ஹைதராபாத் மேடிபள்ளி பீர்பஜடிகுடா சந்திப்பு அருகே போதையில் வாகனம் ஓட்டிய நபரால் பயங்கரமான சாலை விபத்து அரங்கேறியுள்ளது. போதையில் இருந்த நபர் ஓட்டி வந்த ஃபார்ச்சினர் கார், எவ்வித உரிமமும் இன்றி போலியான நம்பர் பிளேட்டுடன் அதிவேகத்தில் வந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்த சொகுசு கார், திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த ஐ10 காரின் மீது பின்னால் இருந்து பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் ஐ10 காரில் பயணம் செய்த தம்பதியினருக்கு கடுமையான மற்றும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. விபத்தின் தாக்கத்தால் நொறுங்கிய காரில் சிக்கித் தவித்த அவர்கள் உடனுக்குடன் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

https://twitter.com/bigtvtelugu/status/2113248562276643094/video/1

   

விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போதையில் வாகனம் ஓட்டியதுடன், போலி நம்பர் பிளேட்டைப் பயன்படுத்திய ஃபார்ச்சினர் கார் ஓட்டுநரைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய அஜாக்கிரதையான செயலால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.