பிரிட்டனில் ஜேமி வார்லி மற்றும் அவரது ஓரினச்சேர்க்கை இணையரான ஜான் மெகோவன்-ஃபாசாகர்லி ஆகியோரால் தத்தெடுக்கப்பட்ட 13 மாதக் குழந்தை பிரஸ்டன் டேவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வார்லி குழந்தையைத் தொட்டிலில் இருந்து தவறவிட்டதாகவும், பின்னர் குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி இறந்ததாகவும் நாடகமாடினார். இருப்பினும், பிரேதப் பரிசோதனையில் குழந்தையின் வாயில் ஏதோ ஒரு பொருளைத் திணித்ததால் மூச்சுக்குழாய் அடைபட்டு மூச்சுத்திணறி இறந்ததும், பல மாதங்களாகக் குழந்தை கடுமையான உடலளவிலும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு, உள் உறுப்புகளில் கடுமையான காயங்களுடன் 40-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும் நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜேமி வார்லிக்குக் கொலைக் குற்றச்சாட்டும், அவரது இணையருக்குக் குழந்தையின் மரணத்தை அனுமதிக்கக் காரணமாய் இருந்ததாகக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய கொடூரமான சம்பவங்கள், ஓரினச்சேர்க்கைத் தம்பதியினர் குழந்தைகளைத் தத்தெடுக்கும் சட்டங்கள் மற்றும் அதற்கான தகுதி மதிப்பீட்டு முறைகள் குறித்த தீவிரமான விவாதங்களையும், கடுமையான விமர்சனங்களையும் சமூகத்தில் எழுப்பியுள்ளன. குழந்தைகளைப் பாதுகாப்பதில் உள்ள குறைபாடுகளுக்காகவும், இத்தகைய தத்தெடுப்பு அனுமதிகளுக்காகவும் இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்படுகின்றன.
