உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் தொழிலதிபர் மணீஷ் (28) கொலை வழக்கில் போலீசார் திடுக்கிடும் தகவல்களை செய்துள்ளனர். மணீஷ் 70 வயதான ராஜ்பீர் என்பவருடன் நீண்டகாலமாக ஓரினசேர்க்கையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்பீர் முசாபர்நகர் மாவட்டம் பிபல்ஹேராவைச் சேர்ந்த சாஹில் என்ற மற்றொரு இளைஞருடன் நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது. இந்த உறவை மணீஷ் அறிந்ததும், ராஜ்பீர் மற்றும் சாஹில் இருவரும் தங்கள் உறவை கைவிடாவிட்டால் வெளியே சொல்லிவிடுவேன் என்று மிரட்டினார். இதற்கு பயந்து, ராஜ்பீரும் சாஹிலும் மனீஷை ஒழிக்க ஒரு திட்டம் தீட்டியுள்ளார்கள்.
அந்தவகையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மணிஷை சந்திக்கப் போவதாகக் கூறி ஊன் அருகே உள்ள ஒரு மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். இந்த உரையாடலின் போது, மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது, சாஹில் திடீரென ஒரு கத்தியை எடுத்து மணிஷை மீண்டும் மீண்டும் குத்தத் தொடங்கினார். அவரைக் குத்திய பின்னர், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர், அதே நேரத்தில் மணிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…