நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்டியில் அதிக அளவிலான கடன்களும் பல்வேறு சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது.
இதுவரை 7.50 சதவீதம் முதல் 8.45 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 7.50 சதவீதம் முதல் 8.70 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஆகஸ்ட் 1 முதலே அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வட்டி விகித உயர்வு ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு பொருந்தாது எனவும் புதிதாக கடன் பெறுபவர்களுக்கு இந்த உயர்வு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
