தமிழ்நாட்டில், நாளுக்கு நாள் புதிய ரேஷன் கார்டின் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களுக்கு பயனாளர்கள் நேரடியாக சென்று ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு, ஒரே நாளில் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கின்றனர். மற்றவர்கள் 45 நாட்கள் வரை காத்திருந்து, அதற்குரிய அப்டேட்டுகளை பெற முடியும்.
ரேஷன் கார்டு 4 படிநிலை ஒப்புதலுக்குப் பின் ப்ரின்டிற்கு செல்லும். ஒரு சிலருக்கு 3 படிநிலைகள் ஓகே செய்துவிட்டு, கடைசி கட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், ஏன் நிராகரிக்கப்பட்டது? என்பதற்கான காரணமும் தெரிவிக்கப்படும். அதே சமயத்தில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், நேரில் அழைத்து அதிகாரிகள் விசாரணைக்கு பின் ஒப்புதல் கொடுக்கப்படும். இதன்படி ஜூலை 15 அல்லது அதற்கு முன்னதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஆகஸ்ட் இறுதியில் புதிய ரேஷன் கார்டு அப்டேட் கிடைக்கும்.
ஆன்லைனில் அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள https://www.tnpds.gov.in/ என்ற வெப்சைட்டுக்கு சென்று, புதிய மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை, என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் போது, கொடுக்கப்பட்ட ஒப்புகைச் சீட்டில் உள்ள, பதிவு எண்ணை சமர்ப்பித்தால், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று, புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க, என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் குடும்பத் தலைவர் பெயர், ஊர், முகவரி, ஆதார் எண், குடும்ப உறுப்பினர்கள் ஆகிய தகவல்களை நிரப்ப வேண்டும். பின் புகைப்படம், மின் கட்டண ரசீது, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து, சரியான மொபைல் எண்ணை கொடுத்து, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். மேலும் இதன் நிலையை அறிய, மேற்கூறிய தகவலின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்.
