இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை…. எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?…. முழு விபரம்….!

By Nanthini on ஐப்பசி 26, 2026

Spread the love

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தேனி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோவை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக்.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை நீடிக்கும் சூழலில், பிற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகங்களின் அறிவிப்புப் படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஏற்கெனவே பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.