சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடும் வகையில் தருமபுரி மாவட்டத்திற்கும், வள்ளல் வல்வில் ஓரி விழாவை ஒட்டி நாமக்கல் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்காது என்பதால் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்தத் தொடர் விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
