தொடர் கனமழையின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது மூன்றாவது மாவட்டமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ. 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
