தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக ஐந்து மாவட்டங்களில் இன்று விடுமுறையாகும்.
