தமிழகத்தில் கனமழை எதிரொலியால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மற்றும் ராமநாதபுரத்தில் 4 தாலுகாக்களிலும் (ராமநாதபுரம், ராமேஸ்வரம், ஆர்.எஸ்.மங்களம், திருவாடனை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
