குஷியோ குஷி… 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளிவந்த சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 6, 2025

Spread the love

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் அரசு சார்பில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என மாவட்ட நிர்வாக முத்தரவிட்டுள்ளது. இதே போல ஆகஸ்ட் 7 நாளை சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோவில் ஆடித்த பசு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.