நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தவர் தான் நடிகர் எம் ஜி ஆர். இவர் தொடக்கத்தில் சரிவை சந்தித்து இருந்தாலும் அதன் பிறகு தன்னுடைய திறமையின் மூலம் பல வெற்றி படங்களை கொடுத்தார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகவும் மாறினார். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 1966 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அன்பே வா. ஏவிஎம் நிறுவனத்தில் எம் ஜி ஆர் நடித்த ஒரே திரைப்படமான இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி மற்றும் நாகேஸ் சொல்லிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைக்க கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தார்.
தன்னுடைய திரைத்துறையில் அறிமுகமான புதிதில் ஒரு சில படங்களுக்கு அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தாலும் அந்த பாடல்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் எம் எஸ் வி தனது கற்பகம் திரைப்படத்தில் வாலிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன் மூலமாக இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்த நிலையில் வாழைக்கு பல பாடல்கள் எழுதும் வாய்ப்பு கொடுத்த எம் எஸ் வி அவர் மீது அபார நம்பிக்கையும் வைத்திருந்தார். அந்த நம்பிக்கையில் அன்பே வா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கான மெட்டை கொடுத்த எம் எஸ் வி வாலி பாடலை எழுதி விடுவார் என்ற நம்பிக்கையில் பாடலின் முழு இசையையும் முடித்துள்ளார்.
ஆனால் கடைசி வரை வாலிக்கு வார்த்தைகள் வரவில்லை. இதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த எம்எஸ்வி மற்றும் வாலி இருவரும் வேறு மெட்டு போடலாம் என்று யோசித்து அதை செய்துள்ளனர். அந்தப் பாடல் தான் அன்பே வா என்ற பாடல். இந்தப் பாடல் இன்றும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வாலி மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக முழு பாடலுக்கும் இசையமைத்த எம்எஸ்விக்கு கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சி எது.
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…
தமிழக அரசியல் வரலாறு 1967-ல் காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு அண்ணா தலைமையிலான திமுக மற்றும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக என…