பிக் பாஸ் சரவணன் மீது பரபரப்பு புகார் அளித்த அவரது மனைவி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…

By Begam on வைகாசி 13, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகர் சரவணன். இவர் இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘பருத்திவீரன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

   

இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார் நடிகர் சரவணன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

   

 

தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சரவணன் மீது அவரது மனைவி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தன் நகைகளை விற்று வாங்கிய விட்டு விட்டு வெளியே போக சொல்லி நடிகர் சரவணன் மிரட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசி அவர் ‘பட வாய்ப்பு எதுவும் இல்லாத நிலையில் தன்னுடைய சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்த சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பணம் கிடைத்த பிறகு வேறு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.