Connect with us

Tamizhanmedia.net

‘குக் வித் கோமாளி’ சிவாங்கி +2 மார்க் எவ்வளவு தெரியுமா?… நிஜமாவே இவ்ளோ மதிப்பெண்ணா?… நல்லா படிக்குற புள்ளயா இருக்குமோ…

CINEMA

‘குக் வித் கோமாளி’ சிவாங்கி +2 மார்க் எவ்வளவு தெரியுமா?… நிஜமாவே இவ்ளோ மதிப்பெண்ணா?… நல்லா படிக்குற புள்ளயா இருக்குமோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட்ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. எத்தனை ரியாலிட்டி ஷோ வந்தாலும் இந்த நிகழ்ச்சியின் இடத்தை எந்த ஒரு நிகழ்ச்சியாலும் பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

ஒரு சமையல் நிகழ்ச்சியை கலகலப்பாக இப்படி காமெடி கலந்து கொடுக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறது இந்த ரியாலிட்டி ஷோ. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் என்றே கூறலாம். மூன்று சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்களிலும் கோமாளியாக இருந்து கலக்கியவர் சிவாங்கி. இவர் தற்பொழுது 4வது சீசனில் குக்காக களமிறங்கி அசத்தி வருகிறார் .சிவாங்கி சின்னத்திரையில் மட்டுமின்றி தற்பொழுது வெள்ளித் திரையிலும் பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார். சமூக வலைத்தளங்களும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், அவ்வப்பொழுது தனது போட்டோ சூட் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்பொழுது குக் வித் கோமாளி சீசன் 4 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் சிவாங்கியின் பிளஸ் டூ மார்க் குறித்த விவரம் ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது அவரே ஒரு பேட்டியில்+2வில் தான் 1200க்கு 1112 வாங்கியதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் காலேஜ் படிக்கும் போது அதிகம் சூட்டிங் சென்று விட்டதால் நிறைய அரியர் வைத்ததாகவும் கூறியிருந்தார் .தற்போது இவரின் மார்க் விவரங்களை அறிந்த ரசிகர்கள் இது நிஜமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top