சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்துள்ள இயக்குனர் வெற்றிமாறன்… அட இந்த படமா?… இத்தனை நாளா இதை கவனிக்கலையே…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் அவர்கள் தான். ஏனென்றால் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் மெகாஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் விருதுகளை வாரியும் குவித்துள்ளது.

   

அந்தவகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் முதன்முதலாக வெளியாகிய ‘பொல்லாதவன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை தழுவியது. அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் இவர் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம்  பல விருதுகளையும் வென்றது.

சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த ‘விடுதலை’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்க, பாடல்களும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் நடித்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இவர் 2002ல் வெளியான ‘காதல் வைரஸ்’ என்ற திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பார். தற்பொழுது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….