வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்… இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை… இரண்டு நாட்களில் அடுத்தடுத்த படுகொலை…!

By Soundarya on தை 14, 2026

Spread the love

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடரும் வன்முறைகளின் ஒரு பகுதியாக, ஃபெனி மாவட்டத்தில் சமீர் குமார் தாஸ் (28) என்ற இந்து இளைஞர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநரான சமீர் குமாரை வழிமறித்த கும்பல், அவரைத் தாக்கிப் படுகொலை செய்ததோடு, அவர் வாழ்வாதாரமாக வைத்திருந்த ஆட்டோவையும் பறித்துச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிறுபான்மையினரிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழலுக்கு மத்தியில், இந்துக்கள் இலக்கு வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்குச் சான்றாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் சுனம்கஞ்ச் மாவட்டத்தில் மற்றொரு இந்து இளைஞர் கடத்தப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டார். மேலும் அவருக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியானது. அடுத்தடுத்து நிகழும் இத்தகைய கொடூரச் சம்பவங்கள், அந்நாட்டில் சிறுபான்மையினரின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.