பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொடுக்கப்படும் ஜாதி சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜாதியை வைத்து தான் அரசு சலுகைகளையும், திட்டங்களையும் பெற முடியும். இதுவரை இந்து வேளாளர் , இந்து நாடார் என்று ஜாதிக்கு முன்பு இந்து என்ற வார்த்தை இடம் பெறும் வகையில் ஜாதி சான்றிதழானது வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்து என்ற வார்த்தையானது நீக்கப்பட்டு ஜாதி பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு கிடைக்கும் அரசு சலுகைகளில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்து வன்னியர் என்பது டிஎன்சி பிரிவில் வரும்.
ஆனால் கிறிஸ்தவ வன்னியர் என்பது பிசி பிரிவில் வரும் மதத்தை குறிப்பிடாமல் ஜாதி மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பதால் மாணவர்களுக்கான அரசு சலுகை கிடைப்பது சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் இது மாணவர்களுக்கு மாணவர்களுடைய உரிமையை தட்டிப்பறிக்கும் என்றும் நிர்வாக ரீதியாக குளறுபடி ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். சாதி சான்றிதழில் இருந்து இந்து என்ற பெயர் நீக்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் அரசு சலுகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
