தமிழக அரசானது ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது, அந்தவகையில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அரசாணையை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து தற்போது தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் மொத்தம் இருக்கும் 2299 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
