36 வயதில் இப்படியா..? தனக்கு புற்றுநோய் இருப்பதை அறிவித்த பிரபல நடிகை.. சோகத்தில் ரசிகர்கள்..!

By Mahalakshmi on ஜூன் 28, 2024

Spread the love

பிரபல இந்தி சின்னத்திரை நடிகை ஹினா கான் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் மூன்றாம் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்தி சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை ஹீனா கான். இவர்யே ரிஷ்டா கியா கேலடா ஹை  என்ற சீரியலில் அக்ஷரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். அந்த சீரியலில் நடித்த இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து கௌசி சிந்தகி k2 என்ற சீரியலில் ஹோமாலிகா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்.

   

   

அந்த சீரியலில் மிகவும் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருந்த இவர் சில மாதத்தில் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே ஏற்படுத்தியிருந்தார்.

 

சின்னத்திரை மட்டும் இல்லாமல் ஹேக்கர், ஸ்மார்ட் போன், லைன்ஸ், விஷ் லிஸ்ட் உள்ளிட்ட  படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார். இந்நிலையில் அவருக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 36 வயதாகும் ஹீனா காணுக்கு மார்பக புற்றுநோய் மூன்றாம் நிலையை எட்டி இருக்கின்றது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது “எல்லோருக்கும் வணக்கம். நான் தற்போது நலமாக இருக்கின்றேன். நான் இந்த புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதற்கான அனைத்து செயல்களையும் செய்து வருகிறேன். நான் இன்னும் அதிக வலிமையுடன் திரும்பி வருவேன். இந்த நிலைமையை புரிந்து கொண்டு ரசிகர்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். உங்கள் ஆசிர்வாதமும் வேண்டுதலும் நான் குணமடைய கண்டிப்பாக தேவை. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.