ச்ச என்னடா இது… “கொஞ்சம் பொறுத்துக்கோம்மா”… பெற்றோர் சொன்ன ஒரே வார்த்தை… உயிரை விட்ட பெண்… அதிரடி தீர்ப்பளித்த ஹைகோர்ட்…!

By Swetha on ஆவணி 8, 2026

Spread the love

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனா தேவி என்பவருக்குத் திருமணமாகி 2.26 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுக்கப்பட்ட நிலையிலும், கணவர் குடும்பத்தினர் கூடுதல் பணமும் பைக்கும் கேட்டு அவரைத் தொடர்ச்சியாக சித்ரவதை செய்து வந்துள்ளனர். தமக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து பெற்றோர் வீட்டில் கூறி மீனா தேவி கதறியபோதிலும், “குடும்பம் என்றால் இதெல்லாம் சகஜம், பொறுத்துப்போ” என்று கூறி பெற்றோர்கள் அவரை மீண்டும் கணவர் வீட்டிற்கே அனுப்பி வைத்துள்ளனர். இதன் விளைவாக, கடந்த 2011-ஆம் ஆண்டு மீனா தேவியும் அவருடைய 15 மாதக் குழந்தையும் படுகாயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

இக்கொடூரக் கொலை வழக்கில் கணவர் தினேஷ் குமார் உள்ளிட்ட 5 பேருக்குக் கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இத்தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் சிங் சவுகான் மற்றும் அப்தேஷ் குமார் சௌதரி அடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்றம் போதுமான காரணங்களைப் பதிவு செய்யாததால் குற்றவாளிகளின் சிறைக் காலத்தையே தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.

   

இருப்பினும், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்த நீதிபதிகள், “பெண் குழந்தைகளுக்குப் பிரச்சனை வரும்போது ‘அனுசரிச்சு போம்மா’ என்று சொல்வதை முதலில் நிறுத்துங்கள்” என்று எச்சரித்தனர். ஆபத்து காலத்தில் பெற்றோரிடம் கேட்கும் உதவி அவர்களின் கடைசி உயிர் வாழும் குரல் என்றும், பெற்றோரின் தவறான சமாதானங்களே குற்றவாளிகளுக்குத் துணிச்சலைக் கொடுத்து உயிரைப் பறிக்கும் நிலைக்குத் தள்ளுகிறது என்றும் கூறி, குடும்பத்தின் தார்மீகப் பொறுப்பை உணர்த்தியுள்ளனர்.