கரூர் துயர சம்பவ வழக்கில், பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை,பாதுகாப்பு அளிப்பதில் கட்சி பேதம் பார்க்காதீர்கள் என ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பொதுக்கூட்டங்கள் நடக்கும் போது குடிநீர், கழிப்பறை, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதைஉறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், இழப்பீடுக் கோரிய வழக்குகளில் விஜய் மற்றும் அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
