BREAKING: விஜய் கட்சிக்கு பேரதிர்ச்சி… திமுக MLA ரகுபதியின் வெற்றி செல்லும்….. சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு….!

By Nanthini on புரட்டாதி 30, 2026

Spread the love

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி 58,201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் சிந்தாமணி 56,709 வாக்குகள் பெற்று, 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில், ரகுபதியின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக்கோரி தவெக வேட்பாளர் சிந்தாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்தத் தேர்தல் வழக்கை தொடக்க நிலையிலேயே நிராகரிக்கக் கோரி திமுக எம்எல்ஏ ரகுபதி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரணை செய்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ரகுபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தவெக வேட்பாளர் சிந்தாமணி தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கை முற்றிலும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

   

முன்னதாக, ரகுபதியின் வெற்றியை எதிர்த்து பொன்.பன்னீர்செல்வம் என்பவரும் தேர்தல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். எனினும், மனுதாரர் நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலமாக மட்டுமே மனுவைத் தாக்கல் செய்திருந்ததால், அவ் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ஏற்கனவே அதனைத் தள்ளுபடி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.