Connect with us

CINEMA

பிரச்சனைகளுக்கு நடுவில் சகுனி வேலை செய்து தேர்தலில் ஜெயித்த ராதாரவி ; இதெல்லாம் உண்மையா

சினிமா டப்பிங் யூனியன் தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் ராதாரவி, மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Radharavi won dubbing election

   

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு 2024 முதல் 2026 ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்காக போட்டியிட்டார்.

அதே தலைவர் பதவிக்கு ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகியோரும் போட்டியிட்டனர். தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 1,021 வாக்குகள் பதிவாகின. அதில் 662 வாக்குகள் பெற்ற ராதாரவி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராதாரவி வெற்றி பெற்றதால் அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணராஜ் 36 வாக்குகளும் பெற்றனர். தலைவர் பதவி மட்டுமல்லாமல் யூனியனின் 23 நிர்வாகிகளும் இந்தத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Radharavi won dubbing election

ஆனால் ராதாரவி தலைவராக கூடாது என மூன்று தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்தனர். இதில் இன்னும் அதிர்ச்சிதரும் விஷயமாக ராதாரவி தன்னிடம் முறைத்தவறி நடந்து கொண்டதாக டப்பிங் ஆர்டிஸ்ட் ஓபனாக பேட்டி கொடுத்து இருந்தார். இதை தொடர்ந்து டப்பிங் யூனியன் பிரச்னை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த பிரச்னையில் சின்மயி பிரச்னை பிரதானமாக பேசப்பட்டது. மஞ்சள் நிற கார்ட் வைத்திருப்பவர்கள் புதுப்பிக்க வேண்டும். வெள்ளை நிற கார்ட் வைத்திருந்த விஜய் புதுப்பிக்க வேண்டாம். சின்மயி பொய் சொன்னதாகவும் ராதாரவி காட்டமாக பேசி இருப்பார். இப்படி வரிசையாக பிரச்னை நீடித்து கொண்டதாகவே இருந்தது.

Radharavi won dubbing election with this method

இந்நிலையில், விருகம்பாக்கத்தில் நேற்று டப்பிங் யூனியனுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ராதாரவி நடக்க முடியாமல் சக நடிகர்களின் உதவியோடு வாக்களிக்க வந்தார். பரபரப்பாக முடிந்த இந்த தேர்தலில் 313 வாக்குகள் வித்தியாசத்தில் ராதாரவி மீண்டும் வெற்றி பெற்று தலைவராகினார்.

ஆனால் அவர் தலைவரானதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய சகுனி வேலை இருப்பதாக தற்போது கூறப்படுகிறது. அதாவது அங்கு பியூன் வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள் என அனைவருக்கும் டப்பிங் யூனியன் கார்ட் எடுத்து கொடுத்துள்ளார் ராதாரவி. அவர்கள் டாப்பிங் கலைஞர்களே இல்லை, ஆனால் அவர்களை டப்பிங் யூனியனில் சேர்த்து அவர்களையும் வாக்களிக்க செய்துள்ளார். அவர்கேள கிட்டத்தட்ட 250 பேர் இருப்பார்கள். அவர்களின் வாக்குகளால் தான் ராதாரவி வெற்றி பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top