இப்படி ஓர் அதிர்ச்சியா?… அதீத உடற்பயிற்சி உயிருக்கே ஆபத்தா?… மாரத்தான் போட்டியில் நடந்த துயரம்… கதறி அழுத பெற்றோர்…!!

By Gayathri on கார்த்திகை 4, 2026

Spread the love

நியூயார்க் நகர மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 24 வயதான ரேச்சல் ஆபா, பந்தயத்தின் 24-வது மைல் தூரமான சென்ட்ரல் பார்க் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து காலமானார். பார்கின்சன் நோயால் மறைந்த தனது தாத்தாவின் நினைவாக முதல்முறையாக இந்த ஓட்டத்தில் களமிறங்கிய அவர், சிறந்த விளையாட்டுப் பின்னணியும் நல்ல உடல் தகுதியும் கொண்டவர். பந்தயத்தின் இறுதிக்கட்டத்தில் அவர் நின்றதைச் செயலி வாயிலாக அறிந்த பெற்றோர், அவரைத் தேடிச் செல்வதற்குள் அங்கு வந்த அவசர ஊர்தி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது.

மவுண்ட் சினாய் மருத்துவ மையத்தில் மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும், கடுமையான உடல் உழைப்பினால் தசை நார்கள் சிதைந்து நஞ்சாகும் ‘ராப்டோமயோலிசிஸ்’ என்ற பாதிப்பினால் அவரது உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக முதலுதவி வழங்கிய போதிலும், ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவர் மரணமடைந்தார். முழுமையான ஆரோக்கியத்துடன் திகழ்ந்த இளம் பெண் ஒருவர் இத்தகைய விபரீத நிலைக்கு ஆளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.