ஐயோ… 18-வது மாடி வரை தீ பரவுது… ஓடுங்க… அலறியடித்து வெளியேறிய மக்கள்… ஹைதராபாத் குடியிருப்பில் உச்சக்கட்ட பதற்றம்… நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ…!!

By Swetha on கார்த்திகை 19, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நார்சிங்கி பகுதியில் அமைந்துள்ள பசிபிகா ஹில் கிரெஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் ஒரு பகுதியில் திடீரென பற்றிய தீ, கரும்புகையுடன் மளமளவெனப் பரவியதால் குடியிருப்புவாசிகளிடையே கடும் பீதி ஏற்பட்டது.

குடியிருப்பின் 12-வது மாடியிலிருந்து 18-வது மாடி வரை தீ வேகமாகப் பரவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் குடியிருப்புவாசிகள் அவசர அவசரமாகக் கட்டிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு பல்வேறு தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன.

   

https://twitter.com/CNNnews18/status/2123369343773966341/video/1

   

தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், விபத்துக்கான சரியான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.