BREAKING: கனமழை… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… முதல் மாவட்டமாக அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 18, 2025

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கும் நாகையில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது திருவாரூர், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால் அங்கும் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.